Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்கின!

பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. துவங்கியது செய்முறை தேர்வு தமிழகம்மற்றும் புது ச்சேரியில் வரும் மார்ச் 2 ம்தேதி ப்ளஸ்2 பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன.

இதற்கான செய்முறை தேர்வு இன்று துவங்கி உள்ளது.

பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் இந்த ஆண்டு சென்னை மாவட்டத்தில் 40 ஆயிரத்து 640 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தத் தேர்வுக்காக மொத்தம் 303 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கட்டங்களாக செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது. பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், பிப்ரவரி 13 முதல் 20-ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது. இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், நுண் வேதியியல், நர்சிங், ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பதப்படுத்துதல், மனை அறிவியல், இன்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங், டெக்ஸ்டைல் உள்ளிட்ட பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடந்து வருகின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement