Ad Code

Responsive Advertisement

டிஜிட்டலில் வாழ்க்கை சான்று சமர்ப்பிக்க பிப்., 28 கடைசி

ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற, ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், வைப்பு நிதி அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும்,
ஆதார் சேர்க்கை செயல்முறை முகாமில், பிப்., 28க்கு முன்,

தங்களது, ஆதார் எண் மற்றும் ஜீவன் பிரமாண பத்ரம் என்ற, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சான்றிதழை, வங்கியில் சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்புநிதி அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது அருகில் இருக்கும் பொது சேவை மையத்திற்கோ சென்று பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு அட்டை, பி.பி.ஓ., எண், மொபைல் எண் ஆகிய தகவல்கள் தேவைப்படும்.

வரும், 28க்குள் பதிவு செய்யாத ஓய்வூதியதாரர்களுக்கு, மார்ச் 1 முதல், ஓய்வூதியம் வங்கி கணக்கில், வரவு வைக்கப்பட மாட்டாது என, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி முதன்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement