இரண்டாவது வீடு வாங்குபவர்களுக்கு ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் வரை மட்டுமேவரிச்சலுகை வழங்க முடியும். அதற்கு மேல் வரிச்சலுகை வழங்குவது தேவையற்றது என வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக்ஆதியா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
கூடுதலாக பணம் வைத்திருப்ப தால் வீடு வாங்குகிறார்கள். இதற்கு மேல் வரிச்சலுகை வழங்க முடி யாது. தவிர இந்த வரிச்சலுகை பெரும்பாலும் தவறாக பயன் படுத்தப்படுகிறது. முதல் முறை வீடு வாங்கு பவர்களுக்கு வரிச்சலுகை கொடுப்பதில் பயன் உள்ளது. ஆனால் இரண்டாம் வீட்டில் உரி மையாளர் தங்குவதில்லை, தவிர அந்த வீட்டின் மூலம் அவருக்கு வாடகையும் கிடைக்கிறது. அரசாங்கத்துக்கு இருக்கும் நிதி குறைவானது. கூடுதலாக பணம் வைத்திருப்பவர் முதலீடு செய் வதற்காக அரசாங்கம் வரிச்சலுகை வழங்க முடியாது. இந்தியாவில் வீடு இல்லாமல் பலர் இருக்கும் போது, இது போன்ற சலுகைகளை அரசு வழங்க முடியாது. வீடு இல்லாத வர்களுக்கு அரசு உதவ வேண்டும் என ஹஷ்முக் ஆதியா கூறினார். நிதி மசோதா (2017) படி ஆண்டுக்கு வட்டி மூலமான வரிச் சலுகை ரூ. 2 லட்சம் மட்டுமே (முதல் மற்றும் இரண்டாம் வீட்டுக் கும் சேர்ந்து) வழங்கமுடியும் என திருத்தப்பட்டுள்ளது.
முன்பு இரண்டாவது வீட்டை கடனில் வாங்கி இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டு வாடகையை வருமானமாக காண்பித்து வரிச்சலுகை பெறலாம். அதாவது இரண்டாவது வீட்டுக்கு கட்டும் வட்டியை, வீட்டு வாடகை வருமானத்தில் கழித்த பிறகு இருக்கும் தொகையை வீடு வாங்கியவரின் மொத்த வருமானத்தில் கழித்துக்கொள்ள லாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை