Ad Code

Responsive Advertisement

அமராவதி சைனிக் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் : வரும் 19 வரை விடுமுறை

அமராவதி சைனிக் பள்ளி மாணவர்கள், 20 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றுமேலும், எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, வரும், 19ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அமராவதி நகர், சைனிக் பள்ளி மாணவர்கள், 20 பேர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.இதில், நேற்று காலை எட்டு பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். ஆனால், மதியமே, மேலும் எட்டு பேர் அனுமதிக்கப்பட்டனர். சீதோஷ்ண நிலை மாற்றமே காய்ச்சலுக்கு காரணம் என, பரிசோதனையில் தெரியவந்தது. தலைமை மருத்துவ அலுவலர் கூறுகையில், 'மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடல் நலன் தேறிய மாணவர்கள், வீடு திரும்ப உள்ளனர்' என்றார். இந்நிலையில், சைனிக் பள்ளிக்கு இன்று முதல் வரும், 19 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்துச்செல்லுமாறு, பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement