Ad Code

Responsive Advertisement

BREAKING NEWS : நாளை ஜல்லிக்கட்டு : முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை 8.45 மதுரை செல்கிறார்

ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு தயாரித்த சட்டவரைவு விரைவில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை 8.45 மதுரை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு  ஜல்லிக்கட்டு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்க படுகிறது 

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை பார்வையிட பன்னீர்செல்வம் மதுரை செல்வதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று டெல்லியில் இருந்து திரும்பிய பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டை நானே துவங்கி வைப்பேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை மதுரை செல்கிறார். ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை பார்வையிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்திலும் நாளை ஜல்லிக்கட்டு நடக்க வாய்ப்புள்ளது. அவர் நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டை தாமே தொடங்கி வைக்க இருப்பதாகவும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று முன்தினம் காலை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது என்று மோடி கைவிரித்து விட்டார். இதனால், ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக சென்னை திரும்பாமல், நேற்று முன்தினம் முழுவதும் டெல்லியில் தங்கி பல்வேறு சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியதுடன், அவசர சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் டெல்லியிலேயே தங்கி, ஜல்லிக்கட்டு நடத்த வழி செய்யும் வகையில் மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்தில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் விவாதித்தார். அதன் அடிப்படையில், மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்திற்கு மாநில அரசு திருத்தம் ஒன்றை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தத்தை, ஒரு அவசர சட்டமாக பிறப்பிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி, இந்த வரைவு அவசர சட்டம் மத்திய அரசின் உள்துறைக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் பரிந்துரையுடன், இந்திய குடியரசு தலைவருக்கும் அனுப்பப்பட்டது. இதனையடுத்து ஒரு சில மணிநேரத்தில் தமிழக ஆளுநர் அவசர சட்டம் பிறப்பிக்க உள்ளார். அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதும் ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement