Ad Code

Responsive Advertisement

'சென்டம்' எடுக்க பள்ளிகள் குறுக்கு வழி : பள்ளி கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை.

மதிப்பெண் குறைந்த, பிளஸ் 2 மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமல், கட்டாய சான்று கொடுத்து வெளியேற்றும் பள்ளி கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் எச்சரித்துள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, மார்ச்சில், பொதுத்தேர்வு நடக்க உள்ளது.

இந்த தேர்வில், 20 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்ட, பலகுறுக்கு வழிகளை கடைபிடிப்பதாக, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.

பல பள்ளிகள், அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், மதிப்பெண் பட்டியலை பார்த்து, மிகவும் குறைந்த மதிப்பெண் மற்றும் தேர்ச்சியை எட்ட முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு, கட்டாய சான்றிதழ் கொடுத்து, அவர்களை வெளியேற்றுவது தெரிய வந்துள்ளது. சில பள்ளிகளில், தேர்ச்சி குறைய வாய்ப்புள்ள, மாணவர்களின் பெயரை, தனியார் கல்வி மையத்தின், தனித்தேர்வர்கள் பட்டியலில் சேர்த்து விடுவதாகவும் புகார் கூறப்படுகிறது. அதனால், பல மாணவர்கள், பொதுத் தேர்வை எழுத முடியாமலும், பள்ளிக் கல்வியை முடிக்காமலும், இடையில் படிப்பை கைவிடும் அபாயம் உள்ளது.

இது போன்று செயல்படும் பள்ளிகளை கட்டுப்படுத்த, பள்ளிக் கல்வி இயக்குனரகம், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகள், தங்கள் மாவட்ட மேல்நிலை பள்ளி களுக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்த வேண்டும். பத்து மாத வருகை பதிவேட்டில் உள்ள மாணவர் விபரங்களை, தற்போது பொதுத்தேர்வுக்கான விபரங்களுடன் சரிபார்க்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் பெயர் விடுபட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement