Ad Code

Responsive Advertisement

TNPSC:குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 85 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக டிசம்பர் 8 வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும் விண்ணப்பதாரர்கள் கடைசிநேரம் வரை விண்ணப்பிக்க முற்பட்டுவருகின்றனர்.இதைத்தொடர்ந்து பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இந்த தொகுதி-1 தேர்விற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 12 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தேர்விற்கான கட்டணம் செலுத்த டிசம்பர் 15 வரையும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் முதனிலைத் தேர்விற்கான தேதியில் மாற்றம் இல்லை.இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஆகையால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement