Ad Code

Responsive Advertisement

TNPSC குரூப் 1 தேர்வுக்கு டிசம்பர் 8-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது. குரூப் 1 தொகுதியில் 85 காலியிடங்களை நிரப்புவற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-இல் நடைபெறுகிறது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதி கடைசியாகும். வங்கி-அஞ்சலகத்தில் தேர்வுக் கட்டணம் செலுத்த டிசம்பர் 10 கடைசியாகும். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட மாட்டாது. எனவே விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.கவனமாக பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களை விண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது.

எனவே இணையவழி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முன்னர் தாங்கள் அளித்துள்ள விவரங்கள் சரியானதுதான் என்பதை உறுதி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்ப விவரங்களை மாற்றக் கோரி பெறப்படும் கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணச் சலுகையை பயன்படுத்தி தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் இருக்கும்விண்ணப்பதாரர்களின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement