Ad Code

Responsive Advertisement

RTI - தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாணை இல்லை.





THANKS: MR.A.JAYAPRAKASH

தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம்
வழங்குவதற்கு அரசாணை இல்லை.

தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் CPSல் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு
பெறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம்,
வழங்குவது தொடர்பாக தமிழக அரசிடம் அரசாணை இல்லையென நிதித் துறை பதில்
வழங்கி உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு

பழைய ஓய்வூதிய திட்டத்தில், தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து
ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
மாதாந்திர (அகவை முதிர்வு) ஓய்வூதியம், பணிபுரியும் போது அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்கள் மரணமடைந்தால், அந்த ஊழியர்களின் கணவன் (அ) மனைவிக்கு
மாதந்தோறும் குடும்ப ‌ஓய்வூதியம், விருப்ப ஓய்வூதியம், இயலாமை
ஓய்வூதியம், ஈடுகட்டும்(அ)இழப்பீட்டு ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம்,
மற்றும் இரக்க ஓய்வூதியம் என்னும் ஓய்வு பெறும் தன்மைக்கு ஏற்ப 7 வகையான
ஓய்வூதியம் நடைமுறையில் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த திரு.ஜெயப்பிரகாஷ் என்பவர் CPS எனப்படும்
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், தமிழகத்தின் அரசு அலுவலகங்களில்
பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மாதந்தோறும் வழங்க வேண்டுமென,
தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை எண் (ம) நாளை குறிப்பிடவும்,
மேலும் இந்த அரசாணையின் நகலை வழங்கவும். என்று தமிழக அரசின் நிதித்
துறைக்கு 26.09.2016 நாளிட்ட மனுவில் வரிசை எண் 1 முதல் 6 வரையான
தகவல்களை கோரி RTI 2005இன் கீழ் கடிதம் அனுப்பினார். நிதித் துறையின்
கடித எண்.53857/நிதி (PGC-1)/2016 நாள்:24.10.2016. என்ற கடிதத்தில்
மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாணை இல்லை என பதில்
வழங்கப்பட்டுள்ளது.

CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், தமிழகத்தின் அரசு
அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ‌ஓய்வூதியம்,
விருப்ப ஓய்வூதியம், இயலாமை ஓய்வூதியம் ஈடுகட்டும்(அ)இழப்பீட்டு
ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம் மற்றும் இரக்க ஓய்வூதியம் என்னும் 7
வகையான ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசிடம் அரசாணை இல்லை.

அரசாணை இல்லையென்பதை விட, இன்னும் அரசால் அரசாணை பிறப்பிக்கப்படவில்லை
என்பதே உண்மை.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement