Ad Code

Responsive Advertisement

NMMS தேர்வுக்கு நமது மாணவர்களை எவ்வாறு தயார்படுத்துவது?

1) மாணவர்களுக்கு போட்டித் தேர்வில் உள்ள அச்சத்தை போக்கி மனதளவில் மாணவனை தயார்படுத்துதல் மிக அவசியம்.

2) நாள்தோறும் தேர்வு பாடப் பகுதிகளில் அதிக பயிற்சி எடுத்து கொள்வது சிறப்பு.

3) Mental Ability, கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய நான்கு தலைப்புகளின் கீழ் கால அட்டவணை ஒன்று தயார் செய்து அதன் படி சரியாக திட்டமிட்டு படிப்பது நிச்சயம் வெற்றியைத் தரும். 

4) மாணவர்களுக்கு OMR Sheet -ல் விடை குறிப்பிடும் முறையை கற்றுக் கொடுத்து மாதிரி OMR Sheet பிரதிகளை மாணவர்களிம் கொடுத்து பயிற்சி பெற செய்வது அவசியம். இது தேர்வு சமயத்தில் விடையளிக்கும் போது ஏற்படும் தடுமாற்றத்தையும், பதற்றத்தையும் குறைக்கும்.

5) அதிக அளவில் மாதிரி தேர்வுகளை (குறிப்பிட்ட கால அளவுக்குள்) எழுதி பார்க்க வேண்டும்.

6) Mental Abilit தேர்வில் கேட்கப்படும் 90 வினாக்களுக்கு விடையளிக்க 90 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும். குறிப்பிட்ட நேரத்திற்குள் விடையளிக்க மாணவர்கள் சிரமப்பட நேரிடும். இதை தவிர்க்க Mental Ability பகுதிகளில் பல்வேறு short Cut யுத்திகளை கையாண்டு விடையளிக்க பழக்கப்படுத்த வேண்டும். பெரும்பாலான வினாக்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட நான்கு Option களை பயன்படுத்தியே விடைகளை விரைவாக கண்டறிய முடியும்.. 

7) சில சமயங்களில் , மாணவர்கள் சரியான விடை தெரிந்திருந்தும் விடைத்தாளில் தவறாக குறிப்பதும் உண்டு. இதை தவிர்க்க ஒவ்வொரு முறையும் சரியான வினா எண்ணிற்கு உரிய விடையை தான் பதிவு செய்கிறோமா என்ற கவனத்துடன் செயல்பட பயற்சி அளிக்க வேண்டும் ...

8) வரலாறு பாடத்தில் இடம்பெறும் ஆண்டுகள், அறிவியல் பாடத்தில் இடம்பெறும் அறிவியல் பெயர்கள் மற்றும் வேதி குறியீடுகள், கணித பாடத்தில் சூத்திரங்கள் போன்றவற்றை தனி காகிதத்தில் சுருக்கமாக குறிப்பு எடுத்து கொள்ள வேண்டும்.. இது தினந்தோறும் பயிற்சிக்கும், தேர்வுக்கு முந்தைய நாள் நினைவு கூர்தலுக்கும் உறுதுணையாக இருக்கும்...

முயற்சி + பயிற்சி = வெற்றி என்ற எண்ணம் எப்போதும் மாணவர்கள் மனதில் இருக்கட்டும்... தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கும், பயிற்சி தரும் ஆசிரிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
தொய்வில்லாமல் பணியை தொடர்வோம்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement