Ad Code

Responsive Advertisement

மொபைல் hotspot ஹாட்ஸ்பாட் - ஏன்...எதற்கு...எப்படி?

ஜென் z தலைமுறை மட்டுமில்லாமல், எல்லாரும் விரும்பும் முக்கியமான ஸ்பாட் ஹாட்ஸ்பாட். மொபைல் டேட்டாவை மற்ற கேட்ஜெட்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் டெக்னாலஜியே ஹாட்ஸ்பாட். ஜியோ வந்தபின் மொபைல் மூலமாக இணையத்தை கணினியுடன் இணைப்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.


ஹாட்ஸ்பாட் என்பது ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக்கூடிய குறிப்பிட்ட பகுதியாகும். 3G, 4G சப்போர்ட் செய்யும் மொபைல் இதற்கு ஏதுவானதாக இருக்கும். இதற்கு டெத்தரிங் என்று பெயர். இதற்கு நம்முடைய மொபைலிலும், கணினியிலும் வைபை வசதி இருந்தால் மட்டும் போதுமானது. இதற்கென தனியாக எந்த ஒரு மென்பொருளும் தேவையில்லை.
இந்த வசதிகளை ஆப்பிள், விண்டோஸ், ஆண்ட்ராய்ட் மற்றும் பிளாக்பெர்ரி மொபைல்கள் வழங்குகின்றன. அனைத்து மொபைலிலும் இந்த வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில மொபைல்கள் USB கேபிள் வழியாக கணினியை இணையத்துடன் இணைக்க வழி செய்கிறது.
ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்வதற்கு முன் நம்மிடம் போதுமான அளவில் டேட்டா உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்கு பாஸ்வேர்ட் போட்டு வைப்பதின் மூலம் அடுத்தவர்கள் நம்முடைய இண்டர்நெட்டை பயன்படுத்துவதை தடுக்க முடியும்.

ஆண்ட்ராய்ட் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?
2.2 இயங்கு தளத்தில் இயங்கும் மொபைல் மற்றும் டேப்லட்களில் இந்த வசதி உள்ளது. இதனைக்கொண்டு 5 பேர் வரை ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்த இயலும். சுமார் இருபது மீட்டர் வரை இந்த ஹாட்ஸ்பாட் வேலை செய்யும். Settings> Wireless & Networks > Portable WiFi Hotspot சென்று க்ளிக் செய்வதின் மூலம் ஆன் செய்து பயன்படுத்தலாம்.


ஐ போன் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?
ஐபோனில் இது personal hotspot என்று அழைக்கப்படுகிறது. Settings> General> Network> Personal Hotspot> WiFi Hotspot சென்று க்ளிக் செய்து பயன்படுத்தலாம்.


விண்டோஸ் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?
விண்டோஸ் மொபைலில் இது internet sharing என்று அழைக்கப்படுகிறது. Start screen> App List> Settings> Internet sharing சென்று க்ளிக் செய்வதன் மூலமாக பயன்படுத்தலாம்.

பிளாக்பெர்ரி மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?
குறைந்த பட்சம் ஐந்து பேர் வரை இதன் மூலம் இண்டர்நெட்டை பயன்படுத்த முடியும். Manage connections> WiFi> Mobile hotspot செல்வதின் மூலம் ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தலாம்.
ஹாட்ஸ்பாட் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை
ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்யும் போது அதில் Network SSID என்பதில் தங்கள் மொபைலின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். விருப்பத்திற்கு ஏற்ப நம்முடைய பெயரைக்கூட வைத்துக்கொள்ளலாம்.
Security ல் நம்முடைய இணைப்பை யார் பயன்படுத்தலாம் என்பதை தீர்மானிக்கலாம். எல்லோரும் பயன்படுத்தலாம் என்றால் open என்பதை தெரிவு செய்யலாம். குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமென்றால் WAP2PSK க்ளிக் செய்து பாஸ்வேர்டு போட்டுக் கொள்ளலாம்.

ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தும் போது அதிக இண்டர்நெட் தீரும் என்பதால் சில செயலிகளின் ஆட்டோ அப்டேட்ஸ்களை ஆப் செய்து வைக்க வேண்டும். இது அதிக இண்டர்நெட் பயன்பாட்டினை குறைக்கும்.
ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தாத நேரங்களில் அதை அனைத்து வைப்பது நல்லது.விரைவில் பேட்டரி குறைவதை இது தடுக்கும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement