Ad Code

Responsive Advertisement

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பாதிப்புகளை உணர்ந்த ஒருவரின் உணர்வு பூர்வமான கவிதை

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பாதிப்புகளை உணர்ந்த ஓருவரின் உணர்வு
பூர்வமான கவிதை


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாம்
இது பாடாய் படுத்திடும் திட்டமாம்!
திட்டம் என்னவென்று தெரியவில்லை-இதில்
எத்தனை அபாயம் என்று புரியவில்லை!
ஓய்வூதியம் என்பது எனதுரிமை
ஆனால் உரிமை கோர இயலவில்லை!
மதில்மேல் பூனையைப் போல
பங்குச் சந்தை முதலீடு!
தனியார் நிறுவன இலாபத்திற்காக
தாரை வார்க்குது அரசாங்கம்!
ஊழியனாகிய எனது விருப்பத்தை
உதறி தள்ளுது அரசாங்கம்
சமூக பாதுகாப்பு இல்லை
இப் புதிய ஓய்வூதிய திட்டத்திலே!
உறவுகள் என்னை கைவிடும் போது
உழைக்கவும் எனக்கு உடலில் தெம்பில்லை!
உடல் உபாதைகளுக்குக் கூட
ஔடதம் வாங்கவும் வழியில்லை!
என் கையில் காசு இருந்தாலே
என் சமூகம் என்னை மெச்சிடுமே!
வெறுங்கையுடன்(ஓய்வூதியம் இல்லாமல்) இருக்கும் எனக்கு
வீட்டுக்குள்ளே அனுமதியில்லை!
படித்து வாங்கிய பட்டமெல்லாம்
காற்றில் இன்று பறந்ததுவே!
புதிய பட்டம் கிடைக்குதுவே அது
தண்டச் சோறு என்பதுவே!
ஏன் இந்த நிலைமையென்று
என்னால் கூற இயலுமே
இதற்கெல்லாம் ஒரே காரணம் தான் அது
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தான்!
ஓன்று கூடுவோம் போராடுவோம்
உடைத்தெரிவோம் CPS திட்டத்தை
இணைந்திடு தோழா!
வென்றிடு தோழா!
இணைவோம்! இணைவோம்!!
இறுதி முடிவு கிடைக்கும் வரை
இணைந்து போராடுவோம்!

இப்படிக்கு
பாதிக்கப்பட்டவர்களில் ஓருவன்
சி.தீர்த்தகிரி M.Sc.,B.Ed.
இ. நி.உ.ஆ., அரூர் ஒன்றியம்
தருமபுரி மாவட்டம்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement