பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற முடியாது.
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் திரு. சத்தியநாராயணன் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இத்துணை நாட்களாக எடுத்த எடுப்பிலேயே அடுத்த வாரம் என்ற அளவில் குறுகிய கால அளவில் ஒரு தேதியினைக் குறிப்பிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்ப்ட்டு வந்தது. ஆனால் இன்று நடந்த விவாதத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பாக உள்ள பத்துக்கும் மேற்பட்ட அனைத்து வழக்குகளும் ஒன்றாக சேர்த்து இறுதி விசாரணையாக விசாரிக்கப்படும்.
இறுதி விசாரணை வரை தற்போதுள்ள தடையாணை உள்ளபடியே தொடரும். இதற்குப் பெயர் Stay resolution order என்பதாகும். இதன் மூலம், புதிதாக தடையாணை ஏதும் இவ்வழக்கில் பெற இயலாது. அதே சமயம், இருக்கின்ற தடையாணையை யாராலும் நீக்க முடியாது. இனி ஒரே ஒரு விசாரணை மட்டும்தான். அது இறுதி விசாரணை மட்டுமே. ஏற்கனவே இருந்ததைப் போல் வார வாரம் லிஸ்ட் வராது. மீண்டும் விசாரணைக்கு வர சில மாதங்கள் ஆகும்.
இன்னும் சொல்லப் போனால், மார்ச் ஏப்ரல் கூட ஆகிவிடும்.இதுதான் தற்போதைய நிலை. தங்கள் உண்மையுள்ள, ப.நடராசன், மாநில தலைமை நிலையச் செயலாளர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் ,தருமபுரி மாவட்டம்.
1 Comments
It not an Judgement,it is only an interim direction
ReplyDeleteஅனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை