Ad Code

Responsive Advertisement

மாணவர்களுக்கு ரொக்கம் இல்லா வரவு-செலவு விழிப்புணர்வு : மத்திய அரசு ஏற்பாடு !!

ரொக்கம் இல்லா வரவுசெலவு பரிவர்த்தனைகளை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது. இந்தியா முழுவதும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பண தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மக்களிடம் பணப்புழக்கம் வெகுவாக குறைந்து உள்ளது. .

இதனை தவிர்க்க மக்கள் தங்களது தேவைகளுக்கு ரொக்கம் இல்லா வரவுசெலவுகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதல் கட்டமாக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:நாட்டில் ரொக்கம் இல்லா வரவுசெலவுகளை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மத்தியில் ரொக்கம் இல்லா வரவுசெலவு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்ட உள்ளது.டிசம்பர்-12ந்தேதி தொடங்கும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் ஒரு மாத காலம் நடைபெறும்.இதையொட்டி நேற்று 670 துணை வேந்தர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கில் ஆதரவு கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.

10 பேரை இணைக்க வேண்டும்
பல்வேறு கல்வி நிறுவனங்களை ஒரு டிஜிட்டல் வளாகத்திற்குள் ஒருங்கிணைக்கும் முயற்சியின் சிறிய தொடக்கம் தான் இது.ஒவ்வொரு மாணவரும் டிஜிட்டல் தளத்தில் சேர்ந்து தனது குடும்பத்தினர் உள்பட 10 பேரை ரொக்கம் இல்லா பரிமாற்றத்தில் இணைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

1 Comments

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement