Ad Code

Responsive Advertisement

முதல்வர் ஜெயலலிதா மறைவு எதிரொலி : அரையாண்டுதேர்வுகள் ஒத்திவைப்பு.

முதல்வர் ஜெயலலிதா மறைவால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றும்,

6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா ேநற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் காலமானார்.

இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வு வருகிற 9ம் தேதியும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

1 Comments

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement