Ad Code

Responsive Advertisement

அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு...!!

அரசாணை எண் 309 நாள் 16.12.2016 இன்படி அகவிலைப்படி 125% to 132%ஆக 1.7.2016 முதல் உயர்த்தப்பட்டு உள்ளது.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவை கோரும் பட்டியல் தயார் செய்து உதவி தொடக்கக் கல்வி அலுவகத்தில் குறிப்பிட்ட தேதிகளில் வழங்கவும்.


நிலுவைப்பட்டியலில்
1. July / October ஆண்டு ஊதிய உயர்வு நாள் குறிப்பிடவும்.


2. 1.7.2016 க்குப் பின் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தேதி மற்றும் நாட்கள் குறிப்பிட்டு நிலுவை பட்டியலில் சேர்க்கவும்

3. 1.7.2016 க்குப்பின் தேர்வுநிலை சிறப்புநிலை பெற்றிருப்பின் எந்த தேதி முதல் எனக் குறிப்பிட்டு பட்டியலில் சேர்க்கவும் (ஆணையின் நகல் இணைக்கவும்)

4.1.7.2016 க்குப்பின் ஊக்க ஊதிய உயர்வுகள் பெற்றிருப்பின் எந்த தேதி முதல் எனக் குறிப்பிட்டு பட்டியலில் சேர்க்கவும் (ஆணையின் நகல் இணைக்கவும்)

5. 1.7.2016 க்குப்பின் அரைச்சம்பள விடுப்பு (UEL ON PA)எடுத்திருப்பின் எந்த தேதி முதல் எந்த தேதி வரை எனக் குறிப்பிட்டு பட்டியலில் சேர்க்கவும் (ஆணையின் நகல் இணைக்கவும்)

6.அனைத்து ஆசிரியர்களின் TPF / CPS எண் குறிப்பிடவும்

7. CPS திட்டத்தில் உள்ள ஆசியர்கள் மொத்த நிலுவையில் 10% CPS பங்களிப்பு தொகை கழித்து நிலுவை கோரவும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement