Ad Code

Responsive Advertisement

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது; எதிர்வினையைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை...!

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறு அறுவை சிகிச்சை (ஆஞ்ஜியோ) செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அறுவைச் சிகிச்சைக்கு முதல்வரின் உடல் ஆற்றும் எதிர்வினையைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையும் தொடர் சிகிச்சையும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிகிறது.


சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆலோசனையின் பேரில் சிகிச்சைகள் அளிப்பட்டன.

மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து முதல்வருக்கு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாகவும் அதற்காக நேற்று இரவு 8 மணி முதல் எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிகிறது. திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்குப் பிறகு முதல்வருக்கு சிறு அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அறுவை சிகிச்சைக்கு முதல்வரின் உடல்நிலை ஆற்றும் எதிர்வினையைப் பொறுத்து 24 மணி நேரம் கண்காணிப்புக்குப் பிறகு அடுத்தகட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement