Ad Code

Responsive Advertisement

கல்வித்துறையில் முடங்கிய 'ஆன்லைன்' தகவல் பரிமாற்றம்

தமிழக கல்வித்துறையில் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் உத்தரவு, அறிவிப்பு, அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் தகவல்கள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் செயலாளர், இயக்குனர் அலுவலகங்களில் இருந்து 'ஆன்லைன்' மூலம் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வரவேண்டிய சுற்றறிக்கை, உத்தரவு, அறிவிப்புகள், தபால்கள் குறைந்து விட்டன. 



'ஆன்லைனில்'



தினமும் கற்றல் கற்பித்தல், நலத் திட்டங்கள் வழங்கல், ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கை, உத்தரவுகள், அறிவுறுத்தல், நலத் திட்டம் தொடர்பான விவரம், புகார்கள் மீதான விசாரணை என பல தகவல் பரிமாற்றங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு 'ஆன்லைன்' மற்றும் தபால் மூலம் அனுப்பப்படும்.


பெரும்பாலும் உடனுக்கு உடன் வேண்டிய தகவல்கள்'ஆன்லைனில்' தான் கேட்கப்படும். அதற்கு கல்வி அலுவலகங்கள் மூலம் உடன் பதில் அனுப்பப்படும். ஆனால் பத்து நாட்களுக்கும் மேலாக இதுபோன்ற 'ஆன்லைன்' தகவல் பரிமாற்றம் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டிச., 7, 8ல் நடக்க வேண்டிய அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 

அதற்கு மாற்றாக அத்தேர்வுகள் எப்போது நடத்த வேண்டும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. நலத் திட்டம் வழங்குவதற்கான வழிகாட்டுதல், கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையால் கல்வித்துறை பணிகள் பாதிக்கிறது என ஆசிரியர்கள்தெரிவித்தனர்.

இதுகுறித்து உயர் கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா இறந்த பின் டிச., 6, 7, 8ம் தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்போது 7, 8ம் தேதிகளில் நடக்க இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இதன் பின் 9ம் தேதியில் இருந்து, இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய வழக்கமான அறிவிப்பு, தபால் தகவல் மற்றும் 'ஆன்லைன்' அறிவுறுத்தல்களும் குறைந்து விட்டன. சாதாரண மற்றும் பதிவு தபால்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே வருகின்றன.இதையடுத்து வர்தா புயல் சீற்றத்தாலும் சென்னையில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. மின் கம்பங்கள், அலைபேசி டவர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின. இதனால் இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 'ஆன்லைன்' தகவல் பரிமாற்றங்களும் குறைந்து விட்டன. இதே சூழ்நிலை அனைத்து துறைகளிலும் உள்ளன, என்றார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement