Ad Code

Responsive Advertisement

பேராசிரியர் நியமன பேச்சு நடத்த குழு: ஆசிரியர்கள் எதிர்ப்பு

அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பேராசிரியர் நியமனம் தொடர்பாக, நேரடி பேச்சு நடத்த குழு அமைக்கப்பட்டதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2012ல், சட்டசபையில், 110 விதியின் கீழ், '162 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 3,120 காலியிடங்கள் நிரப்பப்படும்' என, அறிவித்தார்.


1,000 இடங்கள் காலி : இதற்காக தனியாக அரசாணை வெளியிடப்பட்டது. அவற்றில், 2,100 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன; இன்னும், 1,000 இடங்கள் காலியாகவே உள்ளன. இவற்றுடன், 2012க்கு பின், காலியான, 1,000 பேராசிரியர் இடங்களையும் சேர்த்து நிரப்ப வேண்டும் என, ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சில கல்லுாரிகளுக்கு மட்டும், பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப, மறைமுக அனுமதி தரப்பட்டது. பிற கல்லுாரிகளுக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும், கல்லுாரி நிர்வாகத்தினருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


பொருளாதார அளவில் நலிவுற்ற பல கல்லுாரி நிர்வாகங்கள், அதிகாரிகளின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாமல், ஆட்களை நிரப்ப முடியவில்லை. இந்நிலையில், காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக, கல்லுாரிகளில் நேரில் சென்று பேச்சு நடத்த, தனியாக குழுவை அமைத்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

சிக்கல் : 'இது, பேராசிரியர்கள் நியமனத்தில், நேரடியாக பேரம் பேச வழி வகுக்கும்' என, ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இப்பிரச்னை, கல்லுாரி கல்வியின் புதிய இயக்குனர், மஞ்சுளாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, அனைத்து பல்கலை ஆசிரியர் சங்கம் மற்றும் கல்லுாரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர், பசுபதி கூறியதாவது:

பேராசிரியர்கள் இல்லாமல், அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியவில்லை. கல்லுாரி கல்வித்துறை இதை கண்டு கொள்ளாமல், புதிதாக குழு அமைத்து, நிர்வாகத்தினரை சந்திக்க உத்தரவிட்டுள்ளது. இது, உயர் கல்வியில், ஊழலுக்கும், முறைகேடுகளுக்கு வழி வகுக்கும். எனவே, இந்த முடிவை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement