Ad Code

Responsive Advertisement

தொடக்கக் கல்வித் துறை படுத்தும்பாடு -குழப்பத்தில் ஆசிரியர்கள்

இந்த வாரத்தில் அதாவது 12.12.2016 முதல் 23.12.2016 வரைக்கும் இரண்டாம் பருவத் தேர்வு,தமிழ் கற்பித்தலில் இரண்டு கட்ட பயிற்சி,19.12.2016 முதல் 22.12.2016 வரை SLAS என்னும் இளம் பிள்ளைகளுக்கு IAS தேர்வுக்கு நிகரான தேர்வு,14.12.2016 ல் பள்ளிகள் அளவில் ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி 15.12.2016 ல் ஒன்றிய அளவில் ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி,NMMS தேர்வுக்கான விண்ணப்பங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் இப்படி படாதபாடு படுத்துவது சரியா.

மனவியல் அடிப்படை செயல்பட வேண்டிய இடம் பள்ளி.பள்ளிகளில் உள்ள பணியை இப்படி அவசர கோலத்தில் செய்ய கட்டாய படுத்தும் நிலையால் என்ன பயன் கிடைக்கும் என்று கூற முடியும்.பள்ளி பணிகளை பொறுத்தமட்டில் எந்த விடயத்திலும் கோபப்பட கூடாது முடியாது.கல்வி துறையில் மாணவர்களை மட்டும் மனவியல் அடிப்படையில் நடத்த வேண்டும் ஆனால் மாணவர்களை சீர்படுத்தும் ஆசிரியர்கள் மனவியல் நிலைக்கு அப்பார்ப்பட்ட இயந்திரங்களா?

இப்படிப்பட்ட நிலை தொடர்ந்து அமையுமானால் ஆசிரியர்களில் மன நோயாளிகள் அதிகம் உருவாவது உறுதி. இதைத்தான் கல்வித்துறை விரும்புகிறதா? அவசரமாக எதையாவது செய்தால் தவறாக முடிந்துவிடுகிறது எதை எப்படி செய்வது என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள்....

தகவல் -திரு.பழனிராஜன் செல்லப்பெருமாள்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement