Ad Code

Responsive Advertisement

பள்ளிகளில் 'டெக்னோ கிளப்'

மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், அறிவியல் அறிவை வளர்க்க பள்ளிகளில் 'டெக்னோ கிளப்' துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், அறிவியல் அறிவை வளர்க்கும் வகையில் தொழில் நுட்ப கழகம் எனும் 'டெக்னோ கிளப்' துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அறிவியல், கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களில் ஆர்வம் உள்ள மாணவர்கள் ஐந்து பேர் உறுப்பினர்களாகவும், எட்டாம் வகுப்பு மாணவர் கிளப் தலைவராகவும் நியமிக்கப்படுவார். கிளப்பை வழி நடத்துபவர்களாக கம்ப்யூட்டர் ஆசிரியர் அல்லது அறிவியல் ஆசிரியர் நியமிக்கப்படுவர்.

போட்டி : சிறப்பாக செயல்படும் 'டெக்னோ கிளப்'களுக்கு இடையே தேர்வு போட்டி நடத்தப்படும். போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வட்டாரம், மாவட்டம், மாநில போட்டிகளில் பங்கேற்பர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement