Ad Code

Responsive Advertisement

கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கூடம் அமைத்த கலெக்டர்!

படிக்க பள்ளிக்கூடம் இல்லாமல் தவித்த மாணவர்களுக்காக கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுத்திருக்கிறார் கோழிக்கோடு கலெக்டர் என்.பிரசாந்த்.

கேரள மாநிலம், கோழிக்கோடு கலெக்டராக இருப்பவர் என்.பிரசாந்த். இவர் அங்கு பல்வேறு மக்கள் நல பணிகள் செய்து பொதுமக்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார். அதேபோல், தற்போதும் ஒரு செயல் புரிந்து பாராட்டு பெற்றிருக்கிறார்.

சமீபத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கோழிக்கோட்டில் உள்ள மலப்புரம் தொடக்கப் பள்ளி மூடப்பட்டது. இதனால், மாணவர்கள் படிப்பதற்கு இடமின்றி தவித்து வந்தனர்.

இதையடுத்து, மாவட்ட கலெக்டர் என்.பிரசாந்த், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில், மூடப்பட்ட பள்ளி மாணவர்கள் படிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு பள்ளி பாதுகாப்பு குழுவும் உத்தரவாதம் அளித்தது.

அதன்படி, கலெக்டர் அலுவலகத்தின் பெரும் பகுதியை மாணவர்கள் படிப்பதற்காக ஒதுக்கி கொடுத்துள்ளார். மேலும், அந்த பள்ளி ஆசிரியர்களும், பணியாளர்களும் தங்களுடைய பணியினை செய்வதற்கான இடத்தையும் ஒதுக்கி கொடுத்திருக்கிறார்.

இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கலெக்டரின் செலவில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அரசிடமிருந்து எந்தவொரு மானியமும் பெறாமல், பொதுமக்கள் வழங்கும் நன்கொடையை ஏற்று இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் கலெக்டர் என்.பிரசாந்த்.

ஏற்கனவே, பல்வேறு சமூக பணிகளின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த கலெக்டர் என்.பிரசாந்த்துக்கு, தற்போது மாணவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுத்ததற்காகவும் பாராட்டு குவிகிறது.

Post a Comment

1 Comments

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement