Ad Code

Responsive Advertisement

மாணவி வெளியேற்றம் : ஆசிரியை இடமாற்றம்

சபரிமலைக்கு மாலை அணிந்த மாணவியை, பள்ளியை விட்டு வெளியேற்றிய தமிழ் ஆசிரியை, வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். வேலுார் மாவட்டம், திம்மணாமுத்துார் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின், 12 வயது மகள், அங்குள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். 

ரமேசும், மகளும் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்தனர். நவ., 24ல், பள்ளிக்கு மாலை அணிந்து வந்த மாணவியை, தமிழ் ஆசிரியை மணிமேகலை, பள்ளியை விட்டு வெளியேற்றியதாக தெரிகிறது. மாணவியின் தந்தை ரமேஷ், வேலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதியிடம் புகார் செய்தார். திருப்பத்துார் கல்வி மாவட்ட அலுவலர் பிரியதர்ஷினி விசாரணையில், சம்பவம் உண்மை என, தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியை மணிமேகலை, திருப்பத்துார் அரசு நிதியுதவி பெறும் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement