Ad Code

Responsive Advertisement

4 ஆண்டுகளாக முடங்கிய கோப்புகளுக்கு புத்துயிர் கல்லூரி கல்வி புதிய இயக்குனருக்கு அனுமதி

கல்லுாரி கல்வித்துறையில், நான்கு ஆண்டுகளாக குவிந்து கிடக்கும் கோப்புகளின் மீது உடனடி முடிவு எடுக்க, புதிய இயக்குனருக்கு, உயர் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
உயர் கல்வி நிர்வாகத்தில் முக்கியமான கல்லுாரி கல்வித்துறை இயக்குனர் பதவி, மூன்றரை ஆண்டுகளாக காலியாக இருந்தது. இப்பதவியில் இருந்த செந்தமிழ்செல்வி ஓய்வு பெற்றதும், செய்யார் கலை கல்லுாரி முதல்வர் தேவதாஸ், கூடுதல் பொறுப்பு வகித்தார்.

கூடுதலாக கவனித்தார்பின், கல்லுாரி கல்வி இணை இயக்குனர் சேகர், தொழில்நுட்ப கல்வி இயக்குனர்கள் மதுமதி மற்றும் ராஜேந்திர ரத்னு ஆகியோர், இந்த பொறுப்புகளை கூடுதலாக கவனித்தனர்.
கூடுதல் பொறுப்புகளால், நான்கு ஆண்டுகளாக பேராசிரியர் நியமனம், முதல்வர்கள் நியமனம், கல்லுாரிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இறுதியாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திர
ரத்னு துணிச்சலாக செயல்பட்டு, 31 கல்லுாரிகளின் முதல்வர் பணியிடங்களை, முறைகேடுகளுக்கு இடமின்றி நிரப்பினார்.இந்நிலையில், புதிய கல்லுாரி கல்வி இயக்குனராக, திருச்சி பெரியார் கல்லுாரி முதல்வர் ஜே.மஞ்சுளா, கடந்த வாரம் பதவியேற்றுள்ளார். பல ஆண்டுகளுக்கு பின், முழுநேர இயக்குனர்
நியமிக்கப்பட்டு உள்ளதால் கல்லுாரி கல்வித்துறையில் கிடப்பில் உள்ள கோப்புகள், மீண்டும் ஆய்வுக்கு எடுக்கப்பட உள்ளன; இதற்கு, உயர் கல்வித் துறை அமைச்சரும் அனுமதி அளித்துள்ளார்.
கல்லுாரி நிர்வாகத்தில் குவிந்துஇருக்கும் பணிகள் குறித்து, கல்லுாரி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் சிவராமன் கூறியதாவது:முழுநேர இயக்குனர் நியமனத்தை வரவேற்கிறோம். அவர் கல்லுாரி நிர்வாக பணிகளை முறைகேடுகளுக்கு இடமின்றி, திறம்பட நடத்துவார் என நம்புகிறோம். ஆறு பி.எட்., கல்லுாரிகள் உட்பட,
15 கல்லுாரிகளின் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன; எட்டு கல்லுாரிகளுக்கு, புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது; இன்னும் திறக்கப்படவில்லை. பணிமூப்பு பட்டியல்
கல்லுாரிகளில், 2,500 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன; 2013 - 14ல் துவங்கப்பட்ட, 14 கல்லுாரிகளில், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; பகுதிநேர ஆசிரியர்கள் மூலம் பாடம் நடக்கிறது.
கடந்த, 1998க்கு பின், 7,000 ஆசிரியர்களுக்கு, பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்படவில்லை. இந்த பணிகளை, கல்லுாரி இயக்குனர் விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement