Ad Code

Responsive Advertisement

3ம் பருவப் பாடப்புத்தகம் மாணவர்களுக்கு 28ம் தேதிக்குள் வினியோகிக்க உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு பாடப்புத்தக சுமையை குறைப்பதற்காக முப்பருவ முறை நடைமுறையில் உள்ளது. இதையடுத்து பாடப்புத்தகங்கள் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனியே அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான இரண்டு பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு தற்ேபாது இரண்டாம் பருவத் தேர்வுகள் நடக்கின்றன. இந்நிலையில், வரும் 24ம் தேதி முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது. ஜனவரி மாதம் தான் பள்ளிகள் இயங்கும் என்பதால் 3ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். முன்னதாக 52 தலைப்புகளில் சுமார் 6 கோடி இலவச பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் பாடப்புத்தகங்களை பெற்று 22க்கும் மேற்பட்ட கிடங்குகளில் வைத்துள்ளனர். இன்னும் சில மாவட்டங்களுக்கு புத்தகங்கள் சென்று சேரவேண்டிய நிலை உள்ளது. இரண்டு நாட்களில் முழுமையாக புத்தகங்கள் சென்று சேர்ந்துவிடும். ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கும் போது அனைத்து மாணவர்களுக்கும் இலவச புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், 28ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்களை அனுப்ப மாவட்ட கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement