வாட்ஸ்அப் தனது புதிய வீடியோ காலிங் சேவையை சில நாட்களுக்கு முன்பு பீட்டா பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இன்று அனைத்து பயனாளர்களுக்கும் மொத்தம் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ் ஆகிய மூன்று இயங்குதளங்களிலும் இந்த வீடியோ கால் வசதி இயங்கும். உங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்துவிட்டால் போதும். இந்த வசதியை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 4.1 வெர்ஷன் முதலே இது இயங்கும்.
கூகுள் டுயோ, ஐ.எம்.ஓ, ஸ்கைப், ஃபேஸ்டைம் போலவே, பெரிய வித்தியாசம் எதுவும் இல்லாமல் இருக்கிறது வாட்ஸ்அப் வீடியோ கால். வாட்ஸ்அப் சாட் போலவே இதுவும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டது. வீடியோகால் பேசிக் கொண்டிருக்கும் போதே, முன் மற்றும் பின் கேமராவை மாற்றிக் கொள்ளவும், ஒலி அளவை மியூட் செய்யவும் முடியும். அதே சமயம் பல போன்களில் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து வைத்திருந்தாலும் கூட, 'இந்த போன் வீடியோ காலிங் வசதிக்கு சப்போர்ட் செய்யாது' எனக் காட்டுவது எரிச்சல். இதற்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் கருத்துக்களை அடுத்து இன்னும் இதனை மேம்படுத்துவோம் எனவும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. பார்ப்போம்!
சாதாரண இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்பாக இருந்த வாட்ஸ்அப், அடுத்து வாய்ஸ் காலிங் வசதியை வெளியிட்டது. தற்போது வீடியோ காலிங் ஆப்ஸ்களுக்கு வரவேற்பு பெருகிவரும் நிலையில் அதனையும் இணைத்துள்ளது. ஏற்கனவே வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு கூடுதல் ஆப்ஷன். அதே சமயம் மற்ற போட்டியாளர்களை சமாளித்து வீடியோ காலிங் ஸ்பெஷலிஸ்ட்டாக வாட்ஸ்அப் மாறுமா என்பது சந்தேகம்தான்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை