தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், 9வது பட்டமளிப்பு விழா, டிச., 2ல் நடக்கிறது. இதில், 11 ஆயிரத்து 181 பேர் பட்டம் பெறுகின்றனர். இது குறித்து, பதிவாளர், எஸ்.விஜயன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், 9வது பட்டமளிப்பு விழா, டிச., 2 காலை, 11:30 மணிக்கு, சென்னை பல்கலையின் நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது. இதில், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், உயர் கல்வி அமைச்சர், கே.பி.அன்பழகன் பங்கேற்கின்றனர். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். பல்கலையின் துணைவேந்தர் பாஸ்கரன் வரவேற்புரை மற்றும் ஆண்டறிக்கை வழங்குகிறார்.
விழாவில், 3,522 முதுநிலை, 7,659 இளநிலை மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். 2,725 டிப்ளமோ மற்றும் 154 முதுநிலை டிப்ளமோ மாணவர்கள் என, 14 ஆயிரத்து 60 மாணவர்கள் சான்றிதழ் பெறுகின்றனர்.பல்கலை அளவில் முதலிடம் பெற்று, 142 பேர் தங்கப் பதக்கமும், 256 பேர் இரண்டு, மூன்றாம் இடமும் பெற்று, சான்றிதழ் பெறுகின்றனர். கனடாவின் காமன்வெல்த் கல்வி கழகத்தின், பாராட்டு சான்றிதழ், பரிசுத்தொகை, 25 ஆயிரம் ரூபாய், இளநிலை மாணவி முத்துவுக்கு வழங்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை