Ad Code

Responsive Advertisement

விரைவில் 'TET' - தேர்வுக்கு புது வினாத்தாள் பல்கலைகளை ஈடுபடுத்த திட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், பி.எட்., கல்லுாரிகள் மூலம் புதிய வினாத்தாள் தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு, 2013க்கு பின் நடக்கவில்லை. தேர்வுக்கு பின், தேர்ச்சி மதிப்பெண்ணில் மாற்றம் கொண்டு வந்ததும், சாதி, மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வந்ததும் சிக்கலை ஏற்படுத்தியது. தேர்வு எழுதியோர், உச்ச நீதிமன்றம் வரை சென்றதால், மூன்று ஆண்டுகளாக, 'டெட்' தேர்வு நடத்தப்படவில்லை.

இந்நிலையில், 'டெட்' தேர்வு வழக்கு, கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும், 'வெயிட்டேஜ்' முறை செல்லும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் விரைவில், 'டெட்' தேர்வை, எவ்வித குழப்பமுமின்றி நடத்த, தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல் மற்றும் மாணவர்களுக்கு அவற்றை சரளமாக பேச சொல்லித் தருவதில் சிக்கல் உள்ளது. எனவே, இனி வரும் காலங்களில், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, இந்த சிக்கல் இருக்கக் கூடாது; தனியார் பள்ளி ஆசிரியர்கள் போல் இருக்க வேண்டும் என, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, புதிய தரமான வினாத்தாள் தயாரிப்புக்காக, பி.எட்., கல்லுாரிகள் மற்றும் பல்கலை மூலம் கமிட்டி அமைக்க, கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement