Ad Code

Responsive Advertisement

HSE - NR ONLINE UPLOAD | நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அரசு தேர்வுத்துறைகள் அறிவுறித்தியுள்ளது.


நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அரசு தேர்வுத்துறைகள் அறிவுறித்தியுள்ளது.

நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணியின் முதற்கட்டமாக
அரசுத் தேர்வுத் துறை இணையதள வழியே அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பெயர்ப்பட்டியலை Offline-ல் தயாரித்திட உதவக்கூடிய வெற்று மென்பொருளை பதிவேற்றம் செய்து, அனைத்து பள்ளிகளும் அவரவர் User ID, Password ஐ பயன்படுத்தி 07.10.2016 முதல் 26.10.2016 வரையிலான நாட்களுக்குள் பதிவிறக்கம் செய்து, உறுதிமொழிப் படிவங்களின் அடிப்படையில் Offline-ல் பெயர்ப்பட்டியலை தயாரித்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தற்போது அப்பணிகளின் தொடர்ச்சியாக, Offline-ல் தயாரிக்கப்பட்ட பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும். பெயர்ப்பட்டியலை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என்பதால் மாணவர்களது விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு முன்னரே அனைத்து விவரங்களையும் சரிபார்த்து பிழைகளின்றி பதிவேற்றம் செய்திட அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை பதிவிறக்கம் செய்து தவறாது "Print"எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வது தொடர்பான வழிமுறைகள்..

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement