Ad Code

Responsive Advertisement

GROUP 4 தேர்வு எழுதும் தோழர்களுக்கு...!

இத்தேர்வில் கவனத்தோடும், கருத்தோடும் எதிர் கொண்டு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

* இனி புதிதாக படிப்பது தேவையற்றது. ஏற்கனவே படித்தவற்றை பலமுறை அசைபோடுங்கள்.

* மக்கள் தொகை புள்ளிவிவரங்கள், பட்ஜெட், அரசு நலத்திட்ட்ங்கள், அரசு விருதுகள், பரிசுகள் உள்ளிடட நடப்பு விவரங்களில் எப்போதும் தெளிவாக இருங்கள்.

* படிக்கும் ஆர்வத்தில் சரியான உணவு, போதிய தூக்கம் ஆகியவற்றில் அசட்டையாக இருக்க வேண்டாம்.

* குறித்த நேரத்திற்கு முன்னரே மையத்திற்கு சென்று விடுங்கள். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, இரண்டு / மூன்று பந்துமுனை பேனா முதலியன எடுத்துவிடடீர்களா என உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.தவறாக எழுதிய விடையை அழிக்க முயற்சிக்க வேண்டாம். பிளேடு, ஒயிட்னர் பயன்படுத்த கூடாது. விடைத்தாள் செல்லாமல் போகலாம். முதலிலேயே சரியாக விடையளித்து விட வேண்டும்.

* பொது அறிவு பிரிவில் 100 வினாக்களும், பொது தமிழில் 100 கேள்விகளும் இருக்கும். முதல் பிரிவில் பொது அறிவில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்களும் இருக்கும்.

* பொது அறிவு அனைவரும் படிப்பர். எனவே "கட் ஆப்' மார்க்கில் உயர்ந்த இடத்தை பிடிக்க, திறனறி தேர்வு, நடப்பு கால நிகழ்ச்சி, பொது தமிழ் இவைகளில் கவனம் செலுத்தி படித்து அதிக பட்ச மதிப்பெண் பெற்றால் அரசு வேலை உறுதி.

* பொருத்துக, இணை தேர்வு, பொருந்தாது என சிக்கலான வினாக்கள் இருக்கும். எனவே இவற்றை கவனமுடன் படித்து, சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும்.

* நேர மேலாண்மை மிக முக்கியம். ஏனெனில் தெரியாத ஒரு கணக்கிற்காக மெனெக்கெட்டு பின்னர் நேரமின்மையால் பல வினாக்களை பதிலளிக்க முடியாமல் வர நேரிடலாம்.

* எனவே முதலில் தெரிந்த வினாக்களுக்கு விரைவாக பதிலளிக்கவும். பின்னர் இதுவா / அதுவா எனைத்தொன்றும் வினாக்களுக்கு சிந்தித்து பதிலளிக்கவும். கடைசியாக தெரியாத வினாக்களுக்கு ஏதாவது ஒரு விடையை இட்டு விடைத்தாளை ஒப்படைக்கலாம். இப்படி செய்தால் தெரிந்த வினாக்களுக்கு விடையளிக்கவில்லையே என வருத்தம் இருக்காது. நெகட்டிவ் மதிப்பெண் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பலராலும் சாதிக்க முடிந்தது உங்களாலும் முடியும்.

உங்களின் இல்டசியம் நிறைவேற, கனவுகள் நனவாக்க வாழ்த்துக்கள்...!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement