Ad Code

Responsive Advertisement

FLASH NEWS:TNTET தீர்ப்பு நாளை அறிவிப்பு.

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் விசாரணை ஒத்தி முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாளை அதற்கான தீர்ப்பு அறிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு மற்றும் வெயிடேஜ் முறையினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் வழக்கு தொடுத்திருந்தனர். அது தொடர்பான விசாரணை வெகு நாட்களாக நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.


இந்நிலையில் வழக்கின் தீர்ப்பானது கோர்ட் எண் 11-ல் வழக்கு எண் 1-ல் முதல் வழக்காக நாளை (09.11.2016) வெளியிடப்படுகிறது.

தீர்ப்பு எவ்வாறு இருக்கும்:

தமிழக ஆசிரியர்கள்அனைவரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் தீர்ப்பு நாளை வெளியிடப்படுகிறது.தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை பொருத்தே பலரது வாழ்க்கையானது ஏற்றம் பெரும்.நல்ல தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிகையுடன் காத்திருப்போம் நாளை வரை...!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement