வங்கிகளில் அதிகபட்சம் ரூ.24,000 பணம் எடுப்பதற்கான இந்த வார வரம்பு கெடு புதன்கிழமை (நவ.23) நிறைவடைகிறது. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதல் வங்கி, ஏடிஎம் பண பரிவர்த்தனையில் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு செய்து வருகிறது.
ஒருவரது வங்கி சேமிப்புக் கணக்கைப் பொருத்தவரை, அவர் ஏடிஎம் மையத்தில் எடுக்கும் பணத்தையும் கணக்கில் கொண்டே மீதித் தொகை மட்டுமே காசோலைக்கு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கிகளில் தொடரும் பண பற்றாக்குறை: வங்கிகளுக்கு போதிய பணத்தை ரிசர்வ் வங்கி தராமல் இருப்பதால், நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தொகையை (ரூ.24,000) அளிக்க முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன. இந்த வாரம் தொடங்கிய திங்கள்கிழமையன்று (நவ.21) ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் ரூ.5,000-மும் செவ்வாய்க்கிழமையன்று (நவ.22) அதிகபட்சம் ரூ.10,000 மட்டுமே வங்கிகள் அளித்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை