Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவு.

ஆசிரியர் பணிக்கான வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பாக சிபிஎஸ்இ செயலாளர் ஜோசப் இம்மானுவேல் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளின் முதல்வர் களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஆசிரியர்கள் கல்வி பணி அல்லாத இதர பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதாக கடந்த அக் டோபர் 25-ம் தேதி நடைபெற்ற மத்திய கல்வி ஆலோசனை வாரிய கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் புகார் எழுப்பினர். இதை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் கற்பித்தல் பணி அல்லாத வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை என்பது சிபிஎஸ்இ பள்ளிகள் உறுதிபடுத்த வேண்டும். அலுவலகப்பணி, போக்குவரத்து, கேன்டீன் நிர் வாகம் உள்ளிட்ட இதர பணிகளை செய்வதற்கு அதற்கென பயிற்சி பெற்ற பணியாளர்களை பள்ளிகள் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement