Ad Code

Responsive Advertisement

கோடி கணக்கில் சேர்த்த பள்ளி ஆசிரியர் கைது!

பர்ஹாம்புர்: ஒடிசா மாநிலத்தில், கிராம தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், 2 கோடி ரூபாய்க்கும் மேல், வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டார்.

முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி உள்ள ஒடிசாவின் பர்ஹாம்புரில் உள்ள ஒரு பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார் திலிப் குமார் ஆச்சாரியா.புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், அவர், பல்வேறு வீடுகள், நிலம், தங்கம் என, 3.4 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வருமானத்துக்கு அதிகமாக, அவர், 2 கோடி ரூபாய் சேர்த்துள்ளதாக கூறி, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement