Ad Code

Responsive Advertisement

ஓய்வூதியதாரர் வாழ்நாள் சான்று தவறாமல் சமர்ப்பிக்க வலியுறுத்தல்

தங்களின் வாழ்நாள் சான்றிதழை, ஓய்வூதியதாரர்கள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்' என, சென்னை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் முதன்மை ஆணையர், சலீம் சங்கர் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் விடுத்த அறிக்கை: வருங்கால வைப்பு நிதி சட்டம் உள்ளடக்கிய, தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் மற்றும் குடும்ப ஓய்வூதிய திட்டத்தின் மூலம், ஓய்வூதியம் பெறும் ஒவ்வொரு பயனாளியும், தாங்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறும் பொருட்டு, ஆண்டுதோறும், நவம்பரில், தாங்கள் உயிரோடு இருப்பதற்கான வாழ்நாள் சான்றிதழ், மனைவியை இழந்தோர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல், இந்த ஆண்டும் நவம்பரில், ஓய்வூதியதாரர்கள், மேற்படி சான்றிதழ்களை, தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் தவறாமல் சமர்ப்பிக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த வாழ்நாள் சான்றிதழை, தற்போது, இணையம் மூலமாக, 'ஜீவன் பிரமான் போர்ட்டலிலும்'பதிவேற்றம் செய்யலாம்; அல்லது, 'ஜீவன் பிரமான் பதா புரோகிராம்' பொது சேவை மையங்களை அணுகியும் சமர்ப்பிக்கலாம்.

தற்போது, இந்தியாவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொது சேவை மையங்கள் உள்ளன. எனவே, ஓய்வூதியதாரர்கள், தங்களது வங்கி, ஜீவன் பிரமான் மையம், பொது சேவை மையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அணுகி, சான்றிதழை பதிவேற்றம் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை, இந்தியாவில் உள்ள எந்த ஒரு ஜீவன் பிரமான் போர்ட்டல் மூலமாகவும் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement