Ad Code

Responsive Advertisement

'தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள்'

தன்னம்பிக்கையுடன் தேர்வுக்கு செல்லுங்கள். வெற்றியை உங்களால் மட்டுமே பெற முடியும்,'' என, மாணவர்களுக்கு, மனநல பயிற்சியாளர், கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி அறிவுரை வழங்கினார். 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், மனநல பயிற்சியாளர், கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும். உங்களின் படிப்புக்கு பல இன்னல்கள் வந்திருக்கலாம்; அவற்றை இனிமேல் நினைக்க வேண்டாம். உங்களுக்கு தீங்கு செய்தவர்களை மன்னித்து விடுங்கள்; இப்போது புதிதாக பிறந்ததாக நினைத்து கொள்ளுங்கள்.

பொதுத்தேர்வுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால், அதை மட்டுமே நினைக்க வேண்டும். அதற்காக, தினமும், பல மணி நேரம் படிக்க துவங்குங்கள். உங்களுக்கு பிடிக்காத பாடமாக இருந்தாலும், பிடித்ததாக கற்பனை செய்து, தன்னம்பிக்கையுடன் படியுங்கள். தன்னம்பிக்கையுடன் தேர்வுக்கு செல்லுங்கள்.வெற்றியை உங்களால் மட்டுமே பெற முடியும். நட்புடன், அருகில் உள்ள மாணவர்களை கட்டியணைத்து, புன்னகையுங்கள். தன்னம்பிக்கையுடன், கைகளை உயர்த்தி, 'ஜெயித்துக் காட்டுவோம்' என, கூறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
கண்களை மூடி, கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கேட்ட மாணவர்கள், தாங்கள் முன்னர் செய்த தவறுகளை உணர்ந்து, கண்களில் நீர் வடித்தனர். பின், தன்னம்பிக்கை பெற்று புன்னகையுடன், 'ஜெயித்துக் காட்டுவோம்' என, உறுதி கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement