அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில்,பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், 100 சதவீதம் தேர்ச்சி அடையும் வகையில், சிறப்பு திட்டத்தை, தமிழக கல்வித்துறை மேற்கொண்டுஉள்ளது.
இதன்படி, பல்வேறு மாவட்டங்களில், மாவட்ட அதிகாரிகளின் தனிப்பட்ட முயற்சியில், பல முன்னோடி பயிற்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னையில், 'பெஸ்ட்;' சிவகங்கை, ராமநாதபுரத்தில்,'எலைட்' திட்டம் போன்றவை இவற்றில் அடங்கும். தர்மபுரி மாவட்டத்தில், காலாண்டு தேர்வில் தோல்வியடைந்த, 5,000 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, தனி பயிற்சி அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு, அவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற பின், பாடங்கள் படிக்கும் முறை குறித்து கேட்டறிய, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எந்த நேரத்திலும், விளக்கம் கேட்கும் வகையில், ஆசிரியர்களின் மொபைல் போன் எண்கள் தரப்பட்டு உள்ளன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை