விளம்பரங்கள், சுவரொட்டிகள், வரவேற்பு வாசகங்கள் இவைதான் வீட்டுச் சுவர்களில் வழக்கமாக இடம் பெற்றிருக்கும். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, உலகப் பொது மறையாம் திருக்குறளை இந்த உலகுக்குத் தந்ததிருவள்ளுவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், ஒரு தெரு முழுவதும் வீட்டுச் சுவர்களில் திருக்குறள்கள் இடம் பெற்றுள்ளன.
சென்னை கே.கே. நகரில் உள்ள வி.பி. அகிலன் தெரு மக்கள்தான் திருக்குறளைப் பரப்பும் இந்தப் புதுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்வமுடன் படிக்கும் மக்கள்: இந்தத் தெருவில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும், அனைவரது வீடுகளின் சுவர்களில் திருக்குறள்களும், அவற்றுக்கான விளக்க உரைகளும் இடம் பெற்றுள்ளன. இந்தத்தெருவைக் கடக்கும் ஒவ்வொருவரும் சிறிது நேரம் நின்று திருக்குறளையும், அதற்கான விளக்கத்தையும் வாசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருக்குறள் தெரு: பொதுவாக, இந்தத் தெருவை அனைவரும் திருக்குறள் தெரு என்றே அழைக்கின்றனர். இதற்கு பின்புலமாக இருப்பது இந்தத் தெருவில் இயங்கி வரும் திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றம்தான்."திருவள்ளுவரின் இரண்டடி திருக்குறளில் அனைத்துக் கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. இதைப் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும் அறிந்துகொள்ளச் செய்வதே எங்களின் நோக்கம். அதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு வீட்டுச் சுவரிலும் திருக்குறளையும், அதற்கான விளக்கத்தையும் இடம் பெறச் செய்துள்ளோம். இதற்கு அனைவரும் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்" என திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றத்தின் பொருளாளர் குருமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் ரோக்கஸ் சேவியர் ஆகியோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்தத் தெருவைச் சேர்ந்த நம்பி மங்கை கூறியதாவது:திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்தாலோசனை நடத்தி, வீட்டு உரிமையாளரின் அனுமதி பெற்று அவரவர் விருப்பத்திற்கேற்ப திருக்குறளைத் தேர்வு செய்கின்றனர். பின்னர், அந்தத் திருக்குறள் விளக்கவுரையுடன் ஓவியர் உதவியுடன் வீட்டுச் சுவரில் எழுதிவைக்கப்படுகிறது. இதற்குப் பொதுமக்கள் அனைவரும்ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.இந்த முயற்சி காரணமாக, தெருவில் வசிக்கும் பெரும்பலானோர் தூய தமிழில் பேசத் தொடங்கியுள்ளனர் என்றார் அவர்

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை