Ad Code

Responsive Advertisement

கல்வி அதிகாரிகள் உத்தரவு : ஆசிரியர்களுக்கு நாற்காலி கிடையாது

பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனர். இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்களுக்கு என்று தனியாக சில விதிகளும், மாணவ மாணவியருக்கு என்று தனியாக சில விதிகளும் கூறப்பட்டுள்ளன. 

ஆசிரியர்களுக்கான விதிகள்:  பள்ளி ஆசிரியர்கள் யாரும் வகுப்பறையில் செல்போன் உபயோகிக்கக் கூடாது. எக்காரணம் கொண்டும் வகுப்பறையில் செல்போனில் பேசக் கூடாது. பாடம் நடத்தும் போது உட்கார்ந்து கொண்டு பாடம் நடத்தாமல் நின்று கொண்டு பாடம் நடத்த வேண்டும். அதனால் வகுப்பறையில் உள்ள நாற்காலிகள் அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
< மாணவர்களுக்கான விதிகள்:   

* மாணவர்கள் காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும். 

* லோ ஹிப், டைட்பிட் பேண்ட், சட்டைகள் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். 

* தலைமுடியை ஒட்ட வெட்டியபடி இருக்க வேண்டும். கை, கால்களில் நீண்ட நகங்கள் இல்லாமல் வெட்டியபடி இருக்க வேண்டும். 

* மீசை வைக்கும் போது மேல் உதட்தை தாண்டி மீசை வெளியில் வராதபடி ஒட்ட வெட்டிய நிலையில் இருப்பதுடன், முறுக்கு மீசை வைக்க கூடாது என்பது உள்பட பல விதிகள் கூறப்பட்டுள்ளன. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement