அரசு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் இடை நிற்றலை குறைப்பதற்கு, ஆசிரியர்கள், மாணவர்களுடன், 'செல்பி' எடுத்து, மாணவர்கள் தொடர்பான இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, மஹாராஷ்டிர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தகவல்களை புகைப்படங்களுடன், 'சரள்' என்னும் மாணவர்கள் இணையதளத்தில் பதிவேற்ற, மாநில அரசு முடிவு செய்துள்ளது.திட்டம் அமலுக்கு வந்த பின், முதல் இரண்டு திங்கள் கிழமைகளில், ஒவ்வொரு ஆசிரியரும், 10 மாணவர்களுடன், மொபைல் போனில், 'செல்பி' எடுத்து, அந்த மாணவர்களின் பெயர், ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களுடன், மாணவர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்;
இவ்வாறு, வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களின் தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பள்ளிக்கு ஒழுங்காக வராத மாணவர்கள் குறித்த தகவல்களை கல்வித் துறையின் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினால், மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை