அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. ஆங்கில வழி கல்வி ஆரம்பித்ததை தொடர்ந்து, அரசு பள்ளிகள் ஓரளவு மாணவர்களை தக்க வைத்து கொண்டன. உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி சுய நிதி பிரிவாகத்தான் செயல்பட முடியும் என்பதால், இப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் மாணவர்கள் குறைவால், உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.
மாணவர்கள் எண்ணிக்கை குறையும் பட்சத்தில், உபரி ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட வேண்டும். மாணவர்களின் வருகையை அதிகரிக்கவும், ஆசிரியர்களை தக்க வைக்கவும், பள்ளி நிர்வாகங்கள் பல்வேறு நடைமுறைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இந்நிலையில் தேவகோட்டையில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்வதற்காக 14 பீகார் மாநில சிறுவர்கள், காரைக்குடி ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கினர். அவர்களை அழைத்து செல்ல பள்ளி நிர்வாக தரப்பில் யாரும் வராததால், போலீசார் அவர்களை மீட்டு விசாரணை நடத்தினர்.
போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தேவகோட்டையில் உள்ள பள்ளியில் ஏற்கனவே பீகார் மாநிலத்தை சேர்ந்த சில மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுதி அமைக்க எவ்வித அனுமதியும் இல்லை. அவ்வாறு தான் இவர்களையும் பள்ளியில் சேர்க்க அழைத்து வந்துள்ளனர்.
ஆனால் பள்ளி நிர்வாகம் தரப்பில், நாங்கள் யாரையும் அழைத்து வர சொல்லவில்லை என்கின்றனர். இந்த மாணவர்களை அழைத்து வந்தது அவர்களது பெற்றோருக்கு தெரியப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. பெற்றோரை தொடர்பு கொள்ள
முயற்சித்து வருகிறோம், என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை