Ad Code

Responsive Advertisement

கணினி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி கிடைக்குமா?

ஆசிரியர் பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்காமல், கணினி அறிவியல் பட்டதாரிகள், வேலைவாய்ப்பு இல்லாமல் திணறுகின்றனர்.தமிழக அரசு பள்ளிகளில், 1992ல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், கணினி அறிவியல் பாடங்கள் அறிமுகமாகின.

அப்போது, கணினி பட்டப்படிப்பு இல்லாததால், கணினி பற்றி அடிப்படை தகவல்கள் தெரிந்தவர்களை ஆசிரியர்களாக அரசு நியமித்தது.
பின், கணினி அறிவியல் பாடத்தில், பி.எஸ்சி., -எம்.எஸ்சி., மற்றும் பி.எட்., படிப்புகள் துவங்கப்பட்டன. இதில், இதுவரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பி.எஸ்சி., - பி.எட்., பட்டம் பெற்று, ஆசிரியர் வேலை இன்றி,திணறி வருகின்றனர்.கணினி அறிவியல் படிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதனால், 'டெட்' என்ற ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாமல், ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாமல், கணினி பட்டதாரிகள் தவிக்கின்றனர்.

'அரசு விரைந்து முடிவு எடுத்து, கணினி பட்டதாரிகளுக்கு, அரசு பணி வழங்க முன்வர வேண்டும்' என, கணினி பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement