Ad Code

Responsive Advertisement

தேசிய வருவாய் வழி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறத் தகுதியுடைய மாணவர்களை தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்படுகிறது. 

இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் ஜனவரி 28ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் நாளை முதல் டிசம்பர் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் டிசம்பர் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வு அனைத்து வட்டார அளவில் மையங்கள் அமைக்கப்பட்டு நடக்கும். இதுகுறித்து கூடுதல் விவரம் வேண்டுவோர் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement