Ad Code

Responsive Advertisement

அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்ட செய்தி குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ச்சியாக அதை புதுப்பித்து வருபவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு மாதம் ரூ.150ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவருக்கு மாதம் ரூ.200ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.300ம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

இவர்கள், ஐந்தாண்டுகளுக்கு மேல் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பவராக இருக்க வேண்டும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதி உள்ள இளைஞர்கள் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சாந்தோம், சென்னை-4 என்ற முகவரியில் விண்ணப்ப படிவங்களை பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement