Ad Code

Responsive Advertisement

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி வரையில் கட்டணம் கிடையாது

புதுடெல்லி,நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி நள்ளிரவு வரையில் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலை 11 தேதி நள்ளிரவு வரையில் வசூலிப்பதை ரத்து செய்ய முடிவுசெய்யப்பட்டு உள்ளது என்று மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி அறிவித்து உள்ளார். 

வாகன போக்குவரத்து தடையின்றி நடக்க ஏதுவாக தற்காலிகமாக சுங்கக்கட்டணம் ரத்து செய்ய்யப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்து உள்ளார் நிதின் கட்காரி.இன்று முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

புதியதாக புதுவடிவத்துடன் ரூ. 2,000 மற்றும் 500 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது. இருப்பினும், 72 மணி நேரத்துக்கு, அதாவது, 11-ந் தேதி நள்ளிரவு வரையில் சில இடங்களில் இந்நோட்டுகளை பயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்டது.* மருத்துவமனைகள்*
மருந்து கடைகள் * பெட்ரோல் விற்பனை நிலையங்கள் * ரெயில் நிலைய முன்பதிவு கவுண்ட்டர்கள் * பஸ் நிலையங்கள் * விமான நிலையங்கள் * உடல் எரியூட்டும் இடம்* கூட்டுறவு சங்கங்கள்* மாநில அரசு நடத்தும் பால் நிலையங்கள் ஆகிய இடங்களில் ரூ. 500, 1000 நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று அறிவித்ததை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி ஏற்பட்டது. மேலும் வாக்குவதாங்களும் நேரிட்டது. இந்நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement