Ad Code

Responsive Advertisement

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எதிர்பார்ப்பு.

பணியில் உள்ள ஆசிரியர்கள், தகுதித்தேர்வை முடிப்பதற்கான அவகாசம், நவம்பரில் முடிவதால், கால அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.தமிழகத்தில், 2011ல், ஆசிரியர் தகுதித்தேர்வு அமலுக்கு வந்தது.

இதன்படி, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, அரசு உத்தரவிட்டது. அரசு உதவிபெறும் பள்ளி கள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 2011க்கு பின் நியமனம் செய்யப்பட்டவர்களும்,

ஆசிரியர் தகுதித்தேர்வை முடிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான கால அவகாசம், வரும் நவம்பருடன் முடிகிறது. ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வில், இட ஒதுக்கீடு சலுகை வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதனால், புதிதாக ஆசிரியர்தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. அடுத்த மாதத்தில் அவகாசம் முடிவதால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், தங்கள் வேலை பாதிக்கப்படுமோ என, கவலையில் உள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து, தமிழக அரசு தெளிவான வழிகாட்டுதல் வழங்காததால், பல இடங்களில், தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை முடிப்பதற்கான கால அவகாசத்தை, 2020 வரை நீட்டித்து, அரசாணை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement