Ad Code

Responsive Advertisement

RELIANCE JIO - நிறுவனத்தின் இலவச அழைப்புச் சேவைக்கு, வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி: ட்ராய் அறிவிப்பு.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்புச் சேவைக்கு, வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி என்று, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.


ஜியோ வழங்கும் இலவச அழைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று, இந்திய தொலைத்தொடர்பு சேவை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ட்ராய் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: - தொலைத்தொடர்புச் சேவை விதிமுறைகளை மீறும் வகையில் ஜியோ செயல்படுவதால், அதனை 90 நாள் சலுகை அறிவிப்பு என்ற காலத்தை கடந்து, அனுமதிக்க முடியாது.

ஜியோ நிறுவனம், தனது 4ஜி இலவச சேவைகளை நீட்டிப்பதற்கான பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், டிராய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement