Ad Code

Responsive Advertisement

Flash news : முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த இலாக்காக்ககளை நிதியமைச்சர் ஓபிஎஸ் கவனிப்பார்: ஆளுநர் மாளிகை அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த இலாக்காக்ககளை நிதியமைச்சர் ஓபிஎஸ் கவனிப்பார் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.  

ஜெயலலிதா வகித்து வந்த பொது நிர்வாகம், உள்துறை உள்ளிட்ட துறைகளை ஓ.பன்னீர் செல்வம் கனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், ''முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை இலாகாக்கள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்.

இலாகா இல்லாமல், ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார். முதல்வர் ஜெயலலிதா நலம் பெற்று திரும்பும் வரை இந்த ஏற்பாடு தொடரும்'' என்று அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement