Ad Code

Responsive Advertisement

அரையாண்டு விடுமுறையும் அம்போ? : ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கவலை

உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், அரையாண்டு விடுமுறையும், தேர்தல் பணிக்காக பறிபோகுமோ என்ற அச்சம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், உள்ளாட்சி தேர்தல், அக்., 17, 19ல் நடைபெறும் என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. தேர்தல் பணியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு தேர்தல் பணி குறித்து, மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது.


கடந்த மாதம், பள்ளி காலாண்டு விடுமுறையின்போது, தேர்தல் பயிற்சி வகுப்புக்கு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். இதன் காரணமாக, காலாண்டு விடுமுறைக்கு, வெளியூர் செல்ல திட்ட மிட்டிருந்தவர்களின் கனவு தகர்ந்தது. எனினும், தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்று, தேர்தல் பணிக்கு தயாராகினர். 

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, மாநில தேர்தல் கமிஷன் மேல்முறையீடு செய்தது; இம்மனு மீதான விசாரணை, 18ம் தேதி நடைபெற உள்ளது.எனினும், குறித்த தேதியில் தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மீண்டும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகவில்லை. 

உயர் நீதிமன்றம், டிச., 30க்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று, தன் உத்தரவில் கூறியுள்ளது. அதன்படி, டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டால், அரையாண்டு தேர்வு விடுமுறையில், தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய சூழல், ஆசிரியர்களுக்கு ஏற்படும். அரசு ஊழியர்களும், விடுமுறைக்கு வெளியூர் செல்ல இயலாது. இதனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement