Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் பதவி உயர்வு?

'தொடக்கக் கல்வித் துறையில், ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், பொதுச் செயலர் பி.பேட்ரிக் ரைமண்ட் தலைமையில், சென்னையில் நடந்தது. இதில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட, தொடக்கக் கல்வி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தொடக்கக் கல்வித் துறையில், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தலா, 50 சதவீத முன்னுரிமை வழங்க, அரசாணை வெளியிட வேண்டும் என்பது உட்பட, வேறு பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement